மும்பையின் மாஸ்டர் பிளான்!. புதிய தலைமைப் பயிற்சியாளராக பொல்லார்ட் நியமனம்!.

ஐபிஎல் தொடரில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, வரும் 2027 சீசனுக்காக அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கீரன் பொல்லார்ட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றி, அணி மூன்று முறை கோப்பையை வெல்லக் காரணமாக இருந்த மஹேலா ஜெயவர்த்தனே அந்தப் பதவியிலிருந்து விலகியதை அடுத்து, இப்போது பொல்லார்ட் அந்தப் பொறுப்பை ஏற்றுள்ளார். மும்பை அணியின் ஆறாவது ஐபிஎல் கோப்பை வெற்றிக்காக இவர் வழிநடத்தவுள்ளார்.

பொல்லார்ட்டின் நீண்டகாலப் பயணம்: 2010-ம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் பிணைந்திருக்கும் பொல்லார்ட், ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு கடந்த நான்கு சீசன்களாக அணியின் பேட்டிங் பயிற்சியாளராகச் செயல்பட்டு வந்தார். 2010-ல் வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்ட இவர், மும்பை அணியின் ஐந்து ஐபிஎல் வெற்றிகளிலும், 2011 மற்றும் 2013-ம் ஆண்டுகளின் CLT20 சாம்பியன் பட்ட வெற்றிகளிலும் முக்கியப் பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பிறகு பொல்லார்ட் கூறியது: “மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பது எனக்கு மிகப்பெரிய பெருமை. என் வாழ்க்கை மற்றும் கிரிக்கெட் பயணத்தில் MI ஒரு மிக முக்கியமான பகுதியாகும். இந்த அணி, வீரர்கள் மற்றும் ‘பல்டன்’ (Paltan) ரசிகர்களுடன் நான் கொண்டுள்ள பந்தம் எனக்கு மிகவும் ஸ்பெஷலானது.

ஒரு வீரராகவும், பின்னர் பயிற்சியாளராகவும் இந்தச் பயணத்தில் பயணித்துள்ளதால், மும்பை இந்தியன்ஸ் எதைக் குறிக்கிறது என்பதையும், நீல மற்றும் தங்க நிற ஜெர்சியை அணிவதன் பொறுப்பையும் நான் நன்றாகப் புரிந்துகொண்டுள்ளேன். என் மீது நம்பிக்கை வைத்த Nita Ambani மேடம், Akash Ambani மற்றும் முழு MI குடும்பத்திற்கும் எனது நன்றிகள். வீரர்களுடன் இணைந்து அணியின் பாரம்பரியத்தைக் காப்பாற்றவும், இளம் திறமைகளைக் வளர்க்கவும், ரசிகர்களுக்குக் கொண்டாட பல தருணங்களை வழங்கவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என்று பொல்லார்ட் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.