அட்லி புது வீடு: பிரமாண்ட இயக்குநர் ஷங்கரிடம் தொழில் கற்றுக் கொண்டு ராஜா ராணி படத்தை இயக்கி 2013ம் ஆண்டு வெளியிட்டார் அட்லி. இயக்குநர் அவதாரம் எடுத்த இந்த 12 ஆண்டுகளில் 5 படங்கள் தான் இயக்கியிருக்கிறார். ஆனால் அந்த 5 படங்களுமே வெற்றிப் படங்கள் ஆகும். அவர் இயக்கி வரும் ஆறாவது படம் தான் ராக்கா.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வீடு வாங்கிப் போடலாம் என முடிவு செய்து பிரபலங்கள் வசிக்கும் பந்த்ரா பகுதியை தேர்வு செய்திருக்கிறார். கடலை பார்த்தபடி இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் அபார்ட்மென்ட் வாங்கியிருக்கிறார் அட்லி என தகவல் வெளியாகியுள்ளது. ரூ. 38 கோடி கொடுத்து அந்த சொகுசு அபார்ட்மென்ட்டை வாங்கியிருக்கிறாராம். தனி லிஃப்ட், பாதுகாப்பு என தன் குடும்பத்துடன் வசிக்க சரியான இடத்தை தேர்வு செய்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் மும்பையில் வீடு வாங்கியதை அட்லி இதுவரை உறுதி செய்யவில்லை. அவர் வீடு வாங்கியிருக்கும் இடத்திற்கு அருகில் தான் பூஜா ஹெக்டேவின் வீடு இருக்கிறது.
ராக்கா ஷூட்டிங்: அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடித்து வரும் ராக்கா படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தான் நடக்கிறது. நடிக்க வசதியாக மும்பை ஜுஹு பகுதியில் மாதம் ரூ. 16 லட்சம் வாடகைக்கு வீடு எடுத்திருக்கிறார் அல்லு அர்ஜுன். இந்நிலையில் அவரை அடுத்து அட்லியோ சொந்தமாகவே வீடு வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது. வீடு வாங்கிப் போடுவது நல்ல முதலீடு என்று நினைக்கிறாராம்.
அட்லி மட்டும் அல்ல திரையுலக பிரபலங்கள் பலரும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதையே விரும்புகிறார்கள். ராக்கா படத்தை இயக்க அட்லிக்கு ரூ. 100 கோடி சம்பளம் என தகவல் வெளியானது. ஹீரோ அல்லு அர்ஜுனுக்கு ரூ. 175 கோடியும், தீபிகா படுகோனுககு ரூ. 25 கோடியும், ரஷ்மிகா மந்தன்னாவுக்கு ரூ. 5 கோடியும் சம்பளம் பேசப்பட்டதாம்.
தீபிகா கர்ப்பம்: ராக்கா படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட நிலையில் தீபிகா படுகோன் இரண்டாவது முறையாக கர்ப்பமானார். அதனால் அவரை நீக்கிவிடுவார்கள் என்றும், தீபிகா கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை குறைத்துவிடுவார்கள் என்றும் பேசப்பட்டது. ஆனால் அந்த இரண்டு தகவலிலுமே உண்மை இல்லை. ராக்கா படத்தில் இருந்து தீபிகா படுகோனை நீக்கவில்லை. மேலும் அவரின் கதாபாத்திரம் வரும் நேரத்தையும் குறைக்கவில்லை. பிரசவம் வரை படப்பிடிப்பில் கலந்து கொள்ளப் போகிறாராம்.
ஜவான், பேபி ஜான்: கோலிவுட்டின் வெற்றிகரமான இயக்குநர் என பெயர் எடுத்த அட்லி தற்போது பான் இந்தியா இயக்குநர் ஆகிவிட்டார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் ஜவான் படம் மூலம் இந்தி திரையுலகிற்கு சென்றவரை நாடே தன்னை திரும்பி பார்க்கும்படி செய்துவிட்டார். ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்த ஜவான் படம் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூல் செய்யவே மோஸ்ட் வாண்டட் இயக்குநராகிவிட்டார் அட்லி.
ஜவான் மூலம் இயக்குநராக பாலிவுட் சென்றவரோ வருண் தவான், கீர்த்தி சுரேஷ் நடித்த பேபி ஜான் இந்தி படம் மூலம் அங்கு தயாரிப்பாளராகவும் ஆகிவிட்டார். பாலிவுட் சென்ற பிறகு தொழில் அதிபர் முகேஷ் அம்பானி வீட்டில் எந்த விசேஷம் நடந்தாலும் அதில் அட்லி, அவரின் மனைவி ப்ரியாவை பார்க்க முடிகிறது.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
இதற்கிடையே இரண்டாவது முறை கர்ப்பத்தை அறிவித்த ப்ரியா அட்லி கடந்த ஏப்ரல் மாதம் 20ம் தேதி பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு Miyou என்று பெயர் வைத்தார்கள். மகனுக்கு மீர் என பெயர் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source link
