மும்பை அணியிடம் வீழ்ந்தது சென்னை: ஐ.எஸ்.எல்., கால்பந்தில் ஏமாற்றம்

மும்பை: ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரை சென்னை அணி தோல்வியுடன் துவக்கியது. லீக் போட்டியில் 0-1 என, மும்பை அணியிடம் வீழ்ந்தது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் 12வது சீசன் நடக்கிறது. நேற்று, மும்பையில் நடந்த லீக் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோதின. முதல் பாதி முடிவு கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது. இரண்டாவது பாதியின் 49வது நிமிடத்தில் சென்னை அணியின் பிரிதம் கோடல், ‘சேம்சைடு’ கோல் அடிக்க, மும்பை அணி 1-0 என முன்னிலை பெற்றது.

தொடர்ந்து போராடிய சென்னை அணியினரால் பதிலடி கொடுக்க முடியவில்லை. முடிவில் சென்னை அணி 0-1 என தோல்வியடைந்தது. சென்னை அணி, வரும் பிப். 23ல் கோல்கட்டாவில் நடக்கவுள்ள லீக் போட்டியில் மோகன் பகான் அணியை சந்திக்கிறது.

Source link