மும்பை: அமெரிக்காவுக்கு எதிராக போரிட்டு வரும் ஈரான், தன்னுடைய ஏவுகணைகளில் இந்தியா, ஜெர்மன், ஸ்பெயின் உள்ளிட்ட

மும்பை: அமெரிக்காவுக்கு எதிராக போரிட்டு வரும் ஈரான், தன்னுடைய ஏவுகணைகளில் இந்தியா, ஜெர்மன், ஸ்பெயின் உள்ளிட்ட நாட்டு மக்களுக்கு நன்றி என்ற வாசகத்தை எழுதியுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் சுமார் ஒரு மாதத்தை நெருங்கி விட்டது. ஈரானின் முக்கிய கட்டமைப்புகளை அமெரிக்காவும், இஸ்ரேலும் சிதைத்தாலும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை ஈரான் சூறையாடி வருகிறது. தற்போது, 10 நாட்களுக்கு தற்காலிக போர் நிறுத்தம் செய்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

இருப்பினும், மேற்காசியாவில் ஏற்கனவே படைகளை குவித்துள்ள அமெரிக்கா, மேலும் 10 ஆயிரம் வீரர்களை கூடுதலாக அனுப்ப பென்டகன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேவேளையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நட்பு நாடுகளின் கப்பல்களை ஈரான் அனுமதித்து வருகிறது. எதிரி நாடுகளின் கப்பல்களோ அல்லது முறையான அனுமதி பெறாமல் வரும் கப்பல்களையும் ஈரான் தாக்கி வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்காவுக்கு எதிராக போரிட்டு வரும் ஈரான், தன்னுடைய ஏவுகணைகளில் இந்தியா, ஜெர்மன், ஸ்பெயின், பாகிஸ்தான் நாட்டு மக்களுக்கு நன்றி என்ற வாசகத்தை எழுதியுள்ளது.

இது தொடர்பான போட்டோவை இந்தியாவுக்கான ஈரான் தூதரகம் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளது. போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஈரான் மக்களுக்கு, இந்திய மக்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அதேபோல, போரை நிறுத்த வேண்டும் என்று பிரதமர் மோடியும் குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Source link