மும்பை: கடந்த இரண்டு ஆண்டுகளில் காணாமல் போன பெண்கள், சிறுமிகள் 86,228 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்று மஹாராஷ்டிரா

மும்பை: கடந்த இரண்டு ஆண்டுகளில் காணாமல் போன பெண்கள், சிறுமிகள் 86,228 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்று மஹாராஷ்டிரா சட்டப்பேரவையில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

மஹாராஷ்டிரா சட்டப்பேரவையில் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்ததாவது:

கடந்த 2024, 2025 ஆகிய ஆண்டுகளில் மாயமானதாகப் புகாரளிக்கப்பட்டவர்களில் பெண்கள் மற்றும் சிறுமியர் 86,228 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

மும்பையில் காணாமல் போன சிறுமிகளில் 99 சதவீதம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். ராய்காட் போன்ற மாவட்டங்களில் 2024-ல் புகாரளிக்கப்பட்ட அனைத்து சிறுமிகளும் (நுாறு சதவீதம்) மீட்கப்பட்டனர்.

குழந்தைகளை மீட்க ‘ஆபரேஷன் முஸ்கான்’, பெண்களைத் தேட ‘ஆபரேஷன் ஷோத்’ போன்ற சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் ஒரு பெண் அதிகாரி தலைமையிலான ‘காணாமல் போனோர் பிரிவு’ செயல்பட்டு வருகிறது. மனிதக் கடத்தலைத் தடுக்க ஏடிஜிபி அந்தஸ்திலான அதிகாரி இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இந்த வழக்குகளை ஆய்வு செய்கிறார்.இவ்வாறு தேவேந்திர பட்னாவிஸ் குறிப்பிட்டுள்ளார்.

Source link