மும்பை: பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா கண்டிப்பாக இந்தியா திரும்ப வேண்டும். நீதிமன்ற நடவடிக்கைகளை

மும்பை: பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா கண்டிப்பாக இந்தியா திரும்ப வேண்டும். நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்துவிட்டு நிவாரணம் கோர முடியாது, என மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் 9000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கிவிட்டு திரும்ப செலுத்தாமல் மோசடி செய்ததாக வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து, 2016 ல் அவர் ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு தப்பி சென்றார். கடந்த 2019 ல் தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அவர் அறிவிக்கப்பட்டார். தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தை எதிர்த்தும், தன்னை பொருளாதார குற்றவாளியாக அறிவித்ததை எதிர்த்தும் இரு மனுக்களை மும்பை உயர்நீதிமன்றத்தில் விஜய் மல்லையா மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுக்களை தலைமை நீதிபதி சந்திரசேகர் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இந்த மனு முன்பு விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் எனில், அவர் நாடு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: விஜய் மல்லையா கண்டிப்பாக நாடு திரும்ப வேண்டும். அவர் நாடு திரும்பாவிட்டால் இந்த மனுவை விசாரிக்க மாட்டோம். நீங்கள் நீதிமன்ற நடவடிக்கையை தவிர்க்கிறீர்கள். வேண்டுமென்றே நீதிமன்ற நடவடிக்கையை புறக்கணித்து விட்டு, நிவாரணம் கோர முடியாது. இந்த மனுவை நாங்கள் தள்ளுபடி செய்யவில்லை. உங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குகிறோம் எனத் தெரிவித்து விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

Source link