மும்பை: மஹாராஷ்டிராவில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வேட்புமனுவை வாபஸ் பெற்றுக் கொண்டதை

மும்பை: மஹாராஷ்டிராவில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வேட்புமனுவை வாபஸ் பெற்றுக் கொண்டதை தொடர்ந்து அஜித் பவார் மனைவி சுனேந்திரா பவார் போட்டியின்றி தேர்வாக உள்ளார்.

மஹாராஷ்டிரா துணை முதல்வராக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து அவர் எம்எல்ஏ ஆக இருந்த பாரமதி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அத்தொகுதியில் அம்மாநில துணை முதல்வரும், அஜித் பவாரின் மனைவியுமான சுனேந்திரா மீண்டும் களமிறங்கினார். அவருக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் களமிறக்கப்பட்டார்.

இதனையடுத்து, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சகஜ் புஜ்பால் மற்றும் தனஞ்செய் முண்டே ஆகியோர் காங்கிரஸ் தலைவர்களுடன் பேசினர். சுனேந்திராவும் காங்கிரஸ் தலைவர் கார்கே உடன் பேசினார். மறைமுகமாகவும் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது காங்கிரஸ் வேட்பாளர் திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் வேட்புமனுவை திரும்ப பெற்றுக் கொண்டார்

இதனையடுத்து பாரமதி தொகுதியில் சுனேந்திரா பவார் போட்டியின்றி எம்எல்ஏ ஆக தேர்வு பெற உள்ளார்.

Source link