மூன்று நாள்களாக ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டுள்ளது.இருந்தும் ஈரான் அனுமதித்த கப்பல்கள் மட்டும் ஹார்முஸைக் கடந்து வருகிறது.ஆனால், அந்தக் கப்பல்களையும் வழக்கமான பாதையில் அல்லாமல், ஹார்முஸிலேயே வேறு பாதையில் செல்ல பரிந்துரைத்துள்ளது ஈரான்.இதற்கு, போர்க் காலத்தில் ஹார்முஸில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளும், தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களும் தான் காரணம்.ஹார்முஸ் ஜலசந்தி முழுவதும் இன்னும் திறக்காததற்கான காரணத்தை அமெரிக்க அதிகாரிகள் ‘தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகைக்கு பகிர்ந்துள்ளனர்.ஹார்முஸ் ஜலசந்தி
போர் காலத்தில் தங்களை தாண்டி எந்தக் கப்பல்களும் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து விடக்கூடாது என்று தான் ஈரானின் புரட்சிகரப் படை ஹார்முஸ் பாதையில் கண்ணிவெடிகளை புதைத்து வைத்துள்ளனர்.ஆனால், இப்போது அவர்களால் அந்தக் கண்ணிவெடிகளின் இடங்களைக் கண்டுபிடித்து அகற்ற முடியவில்லை.அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்கு பின், ஈரான் சிறிய படகுகளில் சென்று கண்ணிவெடிகளைப் புதைத்து வைத்துள்ளனர்.அவை அங்குமிங்கும் புதைக்கப்பட்டுள்ளது. ஆனால், அவற்றின் இடம் குறித்து ஆவணம் சரியாக செய்யப்படவில்லை. அதனால், அந்தக் கண்ணிவெடிகளை அகற்றுவதில் இப்போது பிரச்னை… குழப்பம் ஏற்பட்டுள்ளது.
