சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் உச்சத்தை தொட்டு வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி வதைப்பதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த தகிக்கும் வெப்பம் காரணமாக, சென்னையில் தற்போது ‘மெட்ராஸ்-ஐ’ எனப்படும் கண் விழி வெண்படல அழற்சி நோய் வேகமாக பரவி வருகிறது.
குறிப்பாக, சென்னை எழும்பூரில் உள்ள அரசு கண் ஆஸ்பத்திரிக்கு மெட்ராஸ்-ஐ பாதிப்புடன் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரமாக கணிசமாக அதிகரித்துள்ளது. முன்னதாக ஓரிருவர் மட்டுமே அவ்வப்போது வந்த நிலையில், தற்போது தினசரி 15 முதல் 20 பேர் வரை புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.
