மேகதாது விவகாரம்.. செய்தியை பார்த்ததும் ரத்தம் கொதிச்சு போச்சு: திமுக துரைமுருகன் ஆவேசம் – dmk former minister durai murugan spoke about mekedatu issue

மேகதாது அணை விவகாரம் தொடர்பான பிரச்சனைகள் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இதில் தமிழ்நாடு அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்பது குறித்தான எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அளவில் எழுந்துள்ளது. இந்நிலையில் மேகதாது அணை விவகாரம் சம்பந்தமாக திமுக பொதுச் செயலாளரும், முன்னாள் நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ள கருத்துக்கள் தற்போது கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது.

அதாவது ஜல் சக்தி துறை இணை அமைச்சர் ராஜ் பூஷன் சௌத்ரி , காவிரி ஆற்றில் குறுக்கே கட்டுப்பான பணிகளை மேற்கொள்வதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுடைய ஒப்புதலை கரநாடக பெற வேண்டியது இல்லை. உச்ச நீதிமன்றம் 16.02.2018 தீர்ப்பில் காவிரியின் குறுக்கே எந்தவிதமான கட்டுமான பணிகளையும் பெறுவதற்கும் தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் உள்ளிட்ட காவிரியை கடந்து செல்லும் ஏனைய பிற மாநிலங்களின் ஒப்புதலை கர்நாடக மாநிலம் பெற வேண்டும் என எங்கும் தெரிவிக்கப்படவில்லை என தெரிவித்து இருந்தார்.

மேகதாது விவகாரம் தொடர்பாக பாமக எம்பி அன்புமணி நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு, இந்த பதிலை அளித்திருந்தார் ராஜ் பூஷன் சௌத்ரி. இதனையடுத்து மேகதாது அணை கட்டுவதற்கு தமிழ்நாட்டின் அனுமதி கர்நாடகாவிற்கு தேவையில்லை என ஒன்றிய இணை அமைச்சர் அளித்துள்ள பதில் தமிழ்நாடு அரசியல் கட்சிகள் இடையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக பல கருத்துக்களை அரசியல் கட்சிகள் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக திமுக பொதுச் செயலாளரும், முன்னாள் நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒன்றிய அமைச்சர் சொன்னது தவறு என திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும், இந்த செய்தியை பார்த்ததும் தூக்கமே வரலை. ரத்தம் கொதிச்சு போச்சு. மறுபடியும் திருப்புறாங்களே என்று தோன்றியது. அரசாங்கம் இந்நேரம் துடிச்சு இருக்கனும். தளபதியாக (முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்) இருந்திருந்தால் எங்களை விரட்டி இருப்பார். யாரையும் தூங்க விட்டிருக்க மாட்டார்.

அத்தனை ஸ்டேட்மெண்ட் வெளியிட்டு இருப்பார். உச்சநீதிமன்றம் தீர்ப்பில் ஒன்றினை அமைச்சர் சொன்னது இல்லைவே இல்லை. அவர் சொன்ன ஸ்டேட்மெண்ட் தப்பு. அதனை அரசு மறுக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட் சொன்ன ஆதாரத்தை காட்டி, நீ இல்லைன்னு சொல்றீயே என்று கேட்க வேண்டும். உண்மையை மறைக்கிறார் என்று நானாக இருந்திருந்தால் வழக்கு தொடர்ந்து இருப்பேன். இந்த அரசு என்ன செய்ய போறாங்க தெரியலை என ஆவேசமாக பேசினார் துரைமுருகன்.

என்னை திட்டினாலும் பரவாயில்லை. காவிரி விவகாரத்தில் மட்டும் ஒற்றுமையாக இருங்கள் எனவும் உருக்கமாக கோரிக்கையை முன்வைத்தார். தொடர்ந்து பேசிய அவர், இந்நேரம் நீர்வளத்துறை எழுந்து நின்று இருக்கனும். சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் பேசி இருக்க வேண்டும். இது லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதார பிரச்சனை. ரத்தம் துடிக்க வேண்டும். அந்த மாதிரியான பிரச்சனை. நல்லவேளை மு.க. ஸ்டாலின் முதல்வராக இல்லையென்றால் என்னை கொன்று இருப்பார்.

தமிழ்நாட்டின் அனுமதியை பெற வேண்டியது இல்லை என்ற நிலை வந்தால் நம்ம கதை குளோஸ். ஒன்றிய அமைச்சரின் சொன்னதை இன்ச் இன்ச்சாக நாம் மறுத்து பேச வேண்டும். இவ்வாறு ஆவேசமாக துரைமுருகன் பேசியுள்ளது தற்போது மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது. அதோடு இவ்விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் கூட்ட வேண்டும். முதல்வர் வெளிப்படையாக இருக்க வேண்டும் எனவும் துரைமுருகன் கோரிக்கையை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link