கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜீவ்காந்தி அறிமுகம் மற்றும் செயல் வீரர் கூட்டம் இன்று கள்ளக்குறிச்சி ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் பா. மோகன் மாவட்ட செயலாளர் குமரகுரு உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
அப்போது கள்ளக்குறிச்சி அதிமுக முன்னாள் எம்எல்ஏ அழகுவேல் பாபு அவர்களின் கணவர் கள்ளக்குறிச்சி நகர செயலாளர் பாபு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது தொடர்ந்து நகர செயலாளராக பணியாற்ற விரும்பவில்லை எனவும் மிக மன வருத்தத்தில் உள்ளேன் என தெரிவித்துவிட்டு கண்ணீர் மல்க மேடையில் கையெடுத்து கும்பிட்டு மாவட்ட செயலாளர் குமரகுருவிடம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறி கடிதத்தைக் கொடுத்துவிட்டு வெளியேறினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
