மேம்பால பணிக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

நாகப்பட்டினம் ரயில் நிலையம் அருகில் அக்கரைப்பேட்டை – வேளாங்கண்ணி சாலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ரயில்வே அமைக்கும் பணி தொடங்கியது. இந்த நிலையில் நிலப் பிரச்சனை காரணமாக 10 ஆண்டுகளுக்கு மேலாக அந்தப் பணிக்கடத்தில் போடப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக 2023 ம் ஆண்டு நெடுஞ்சாலைத்துறை சார்பாக 101 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்தது. 1312 மீட்டர் நீளத்தில் பிரமாண்டமாக அமையவுள்ள ரயில்வே மேம்பால கட்டுமான பணிகள் நிறைவு பெற்ற நிலையில் சர்வீஸ் சாலை அமைப்பதற்கான நிலத்தை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.

இந்த நிலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கட்டிடங்களை நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் ராஜேஸ்கண்ணா தலைமையில் கோட்ட பொறியாளர் அய்யாதுரை வட்டாட்சியர் ராஜ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அப்புறப்படுத்தினர்.

ஆக்கிரமப்புகள் அகற்றப்பட்டதை தொடர்ந்து இரண்டு மாதத்தில் பாலத்தின் முழு கட்டுமான பணி நிறைவுபெறும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source link