மேற்காசியாவில் நடைபெற்று வரும் போரால், முதல் இரண்டு வாரங்களில் மட்டும், 3,300 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த மோதலால் லெபனான், ஈரான் நாடுகளே பெரிதும் பாதித்துள்ளன. இதில் 30,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், 40 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
======================
இஸ்ரேல் கப்பல் சேதம்!
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை, இஸ்ரேல் தொடர்புடைய எம்.எஸ்.சி., இஷிகா என்ற கப்பலை ஹார்முஸ் ஜலசந்தியில் ட்ரோன் மூலம் தாக்கியதாக அறிவித்துள்ளது. இந்த தாக்குதலில் கப்பலில் பெரிய அளவில் தீப்பற்றியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியான நிலையில், இஸ்ரேல் அதனை உறுதிப்படுத்தவில்லை.
=========================
5 இந்தியர் காயம்!
அபுதாபியின் அஜ்பான் பகுதியில், ஈரான் ஏவுகணை தாக்குதலை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக இடைமறித்தது. அப்போது ஏவுகணையின் பாகங்கள் விழுந்ததில் 12 பேர் காயமடைந்துள்ளனர். அதில் ஐந்து பேர் இந்தியர்கள், ஏழு பேர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள்.
