மேற்காசிய போர் பிரச்னையில் பிரதமர் மோடி செயல்படாததே அங்கு வசிக்கும் இந்தியர்களின் துன்பத்திற்கு காரணம்.

மேற்காசிய போர் பிரச்னையில் பிரதமர் மோடி செயல்படாததே அங்கு வசிக்கும் இந்தியர்களின் துன்பத்திற்கு காரணம். ‘மன் கீ பாத்’ ரேடியோ நிகழ்ச்சியில் பேசுவதால், இந்த பிரச்னைக்கு தீர்வு காணமுடியாது. வெளிநாடு வாழ் இந்தியர்களின் பிரச்னைகளை மத்திய அரசு புறக்கணிக்கிறது.

கே.சி.வேணுகோபால் பொதுச்செயலர், காங்கிரஸ்

முடிவு கட்டும் தேர்தல்!

மேற்கு வங்கத்தில் 15 ஆண்டுகளாக நடக்கும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்.,கின் கொடுங்கோல் ஆட்சிக்கு இந்த சட்ட சபை தேர்தல் முடிவு கட்டும் . ‘துஷ்டிகரன்’ எனப்படும் துதிபாடும் அரசியல், நிதியை தவறாகப் பயன்படுத்துதல், ஊழல் ஆகியவற்றை குறிப்பதாக திரிணமுல் காங்கிரஸ் கட்சி மாறியுள்ளது.

சி.ஆர்.கேசவன் செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,

குற்றவாளிகளை காக்கும் அரசு!

சபரிமலை அய்யப்பன் கோவிலில் தங்கம் கொள்ளை போன வழக்கில், கேரளாவை ஆளும் பினராயி விஜயன் அரசு கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுகிறது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தங்கள் கட்சியினரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பாதுகாக்கிறது. கொள்ளை போன தங்கம் எங்கே என்பதையும் அரசு கூற மறுக்கிறது.

ரமேஷ் சென்னிதலா மூத்த தலைவர், காங்.,

Source link