மேற்கு வங்கத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000 வழங்கப்படும்- அமித் ஷா அறிவிப்பு

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாக்குறுதிகளை அறிவித்தார்.

மேற்கு வங்கம் மாநிலத்திற்கு ஏப்ரல் 23, 29ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.

இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியதாவது:-

மேற்கு வங்கத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000 வழங்கப்படும்.

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைந்த 6 மாதங்களில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்.

கடந்த 15 ஆண்டுகள் மேற்கு வங்க மக்களுக்கு இருண்ட காலமாகவே இருந்திருக்கிறது.

மேற்கு வங்க மாநில மக்கள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீது வைத்த நம்பிக்கையை அவர் காப்பாற்றவில்லை.

பாஜக எவ்வாறு மேற்கு வங்கத்தை கட்டமைக்க போகிறது என்பதற்கான செயல்திட்டம் தான் இந்த தேர்தல் அறிக்கை.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Source link