மேற்கு வங்கத்துக்கு பிரதமர் மோடி அளித்த 6 வாக்குறுதிகள்

மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்கு பாஜக ஆறு முக்கிய வாக்குறுதிகளை அளிக்கிறது. இவை பிரதமர் மோடியின் உத்தரவாதங்களாகும். முதல் உத்தரவாதம், பாஜக ஆட்சி அமைந்ததும், தற்போது நிலவும் அச்சம் நிறைந்த சூழலை அகற்றி, அதற்குப் பதிலாக நம்பிக்கையை நிலைநாட்டும். சட்டத்தின் ஆட்சியின் மீதான நம்பிக்கையை நாங்கள் மீட்டெடுப்போம். இரண்டாவது உத்தரவாதம், அரசு நிர்வாக இயந்திரம் மக்களுக்கு சேவை செய்வதாகவும், பொறுப்புள்ளதாகவும், பதில் சொல்லக் கடமைப்பட்டதாகவும் மாற்றப்படும்.

மூன்றாவது உத்தரவாதத்தின்படி, திரிணமூல் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நடந்த ஒவ்வொரு ஊழல் குறித்தும், ஒவ்வொரு முறைகேடு குறித்தும், பெண்களுக்கு இழைக்கப்பட்ட ஒவ்வொரு அநீதி குறித்தும், ஒவ்வொரு பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்தும் மீண்டும் விசாரிக்கப்படும்.

நான்காவது உத்தரவாதத்தின்படி, திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியின் கீழ், ஊழலில் ஈடுபட்ட அனைவரும் சிறையில் அடைக்கப்படுவார்கள். அமைச்சராக இருந்தாலும் சரி அல்லது ஒரு காவலாளியாக இருந்தாலும் சரி இனி சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாது. ஐந்தாவது உத்தரவாதத்தின்படி, அகதிகளுக்கு, இந்திய அரசியலமைப்புச் சட்டம் அளித்துள்ள அனைத்து உரிமைகளும் சலுகைகளும் வழங்கப்படும். அதேநேரத்தில், ஊடுருவல்காரர்கள் வெளியேற்றப்படுவார்கள். அவர்கள் இந்தியாவில் தங்கியிருக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

ஆறாவது உத்தரவாதத்துக்கு இணங்க, இங்கு பாஜக அரசாங்கம் அமைக்கப்பட்ட மறுகணமே, நாங்கள் 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளைச் செயல்படுத்தத் தொடங்குவோம்” என தெரிவித்தார்.

Source link