மேற்கு வங்க பிரச்சாரத்தில் மீன் அரசியல்

புதுடெல்லி: மேற்கு வங்க மக்​கள் பல நூற்​றாண்​டு​களாக மீன் உணவுக்​குப் பழகி விட்​டனர். மேலும், காளி, துர்கா உள்​ளிட்ட கடவுள்​களுக்​கும் மீன் உணவு​களைப் படைக்​கின்​றனர். அங்கு மீன் உணவை சைவ​மாகக் கருதி உண்​ணும் பிராமணர்​களும் அதிகம். இந்த மீன் உணவு தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் பேசுபொருளாகி உள்​ளது.

இது குறித்​து, முதல்​வர் மம்தா பிரச்​சா​ரத்​தில் பேசுகை​யில், “பாஜக ஆட்​சிக்கு வந்​தால், வங்​காள மக்​களின் உணவுப் பண்​பாடு, குறிப்பாக நமக்கு மிக​வும் பிடித்​த​மான மீன் மற்​றும் இறைச்சி உண்​ணுவதைத் தடை செய்து விடு​வார்​கள்” என்​றார். இதே கருத்தை திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யின் மற்ற தலை​வர்​களும் மீன் உணவைப் பயன்​படுத்தி பாஜகவை விமர்​சிக்​கின்​றனர்.

Source link