மேலும் ஒரு ஹிந்து கொலை வங்கதேசத்தில் பதற்றம்

டாக்கா: வங்கதேசத்தில், நாளை பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மேலும் ஒரு ஹிந்து வியாபாரி கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டு உள்ளார்.

நம் அண்டை நாடான வங்கதேசத்தில், முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்ற பின், சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்கள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது.

நுாற்றுக்கணக்கானவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். கோவில்கள், ஹிந்துக்களின் கடைகள், நிறுவனங்கள் சூறையாடப்பட்டுள்ளன.

இங்கு, நாளை பொதுத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஒரு ஹிந்து கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.

மய்மன்சிங் மாவட்டம் திரிசால் உபசிலா பகுதியில் உள்ள போகர் பஜாரில், அரிசி கடை நடத்தி வந்த சுசேன் சந்திர சர்க்கார் என்பவரை மர்ம நபர்கள் நேற்று முன்தினம் கொடூரமாக வெட்டி கொன்றனர். மேலும், கடையில் இருந்த லட்சக்கணக்கான ரூபாயையும் திருடிச் சென்றனர்.

பதற்றம் நிலவுவதால் ஹிந்து சமூக அமைப்புகள் இச்சம்பவத்தை கண்டித்து, தேர்தலுக்கு முன் சிறுபான்மையினர் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கோரியுள் ளன.

Source link