மொஜ்தபா காமேனி தகவலுக்கு $10 மில்லியன் சன்மானம்: அமெரிக்கா அறிவிப்பு|$10M Reward: US Targets Iran’s Mojtaba Khamenei

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி, ஈரான் மீதான போரை தொடங்கியது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்.

அந்தப் போரின் முதல் நாளிலேயே ஈரானின் உச்ச தலைவர் காமேனியை குறி வைத்தது இரு நாடுகளும். அவரும்‌ அந்தத் தாக்குதலில் உயிரிழந்தார்.

அவருக்குப் பின்னான உச்ச தலைவரை சமீபத்தில் தான் ஈரான் அறிவித்தது.‌ அவர் காமேனியின் இளைய மகனான மொஜ்தபா காமேனி.

தற்போது இவருக்குக் குறி வைத்துள்ளது அமெரிக்கா.

அமெரிக்காவின் சன்மானம்

அமெரிக்காவின் சன்மானம்

அதாவது ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை (IRGC) சேர்ந்த முக்கிய தலைவர்களின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது அமெரிக்க அரசு.

இவர்களைப் பற்றி தகவல் தருபவர்களுக்கு 10 மில்லியன் டாலர்களை வரை சன்மானம் என்று அறிவித்துள்ளது.

10 மில்லியன் டாலர் என்றால் இந்திய ரூபாயில் கிட்டத்தட்ட 92.47 கோடி.

அமெரிக்கா வெளியிட்டுள்ள இஸ்லாமிய புரட்சிகர காவல்படையில் மொஜ்தபா காமேனியின் படம் தான் முதலில் இடம்பெற்றிருக்கிறது.

ஏற்கெனவே ஈரானில் நடந்த தாக்குதலில் மொஜ்தபா காமேனிக்கு காயமடைந்திருந்தார்.

அவர் இறந்துவிட்டார் என்கிற செய்திகள் கூட பரவின.

இப்போது அவர் குறித்த தகவல்களுக்கு சன்மானம் அறிவித்துள்ளது அமெரிக்க அரசு.

Source link