புதுடில்லி: நாட்டின் மொத்த விலை பணவீக்கம், தொடர்ந்து மூன்றாவது மாதமாக, கடந்த ஜனவரியிலும் அதிகரித்துள்ளது. மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்தாண்டு டிசம்பரில், 0.83 சதவீதமாக இருந்த பணவீக்கம், நடப்பாண்டு ஜனவரியில் 1.81 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அடிப்படை உலோகங்கள், தயாரிக்கப்பட்ட பொருள்கள் மற்றும் உணவு பொருள்களின் விலை அதிகரித்ததே, பணவீக்கம் உயர முக்கிய காரணமாக அமைந்துள்ளது. உணவு பொருள்கள் பிரிவில் கடந்த சில மாதங்களாகவே பணவாட்டம் நிலவி வந்த நிலையில், ஜனவரியில் பணவீக்கம் 1.55 சதவீதமாக பதிவாகியுள்ளது.
