கோல்கட்டா: ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் கோல் மழை பொழிந்த மோகன் பகான் அணி 5-1 என, ஒடிசா அணியை வீழ்த்தியது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 12வது சீசன் நடக்கிறது. கோல்கட்டாவில் நடந்த லீக் போட்டியில் மோகன் பகான், ஒடிசா அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய மோகன் பகான் அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
மோகன் பகான் அணி சார்பில் ஜேமி மெக்லாரன் ‘ஹாட்ரிக்’ (14, 24, 45+2வது நிமிடம்), ஆல்பர்டோ ரோட்ரிக்ஸ் (42வது) ஒரு கோல் அடித்தனர். ஒடிசா அணிக்கு ரஹிம் அலி (43வது நிமிடம்) ஆறுதல் தந்தார்.
இதுவரை விளையாடிய 4 போட்டியிலும் வெற்றி பெற்ற மோகன் பகான் அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. மூன்று போட்டியில், 2 ‘டிரா’, ஒரு தோல்வி என, 2 புள்ளிகளுடன் ஒடிசா அணி 10வது இடத்தில் உள்ளது.
ஜாம்ஷெட்பூரில் நடந்த மற்றொரு லீக் போட்டியில் ஜாம்ஷெட்பூர், இன்டர் காஷி அணிகள் மோதின. இதில் ஜாம்ஷெட்பூர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
