“மோடியின் வாயைப் பூட்டி, சாவியை அமெரிக்க அதிபரிடம் கொடுத்தது போல் உள்ளது” – பிருந்தா காரத் காட்டம் |Brinda karat about rahul gandhi and modi at kerala

கேரள மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கேரளாவில் முதல் ரவுண்ட் பிரசாரம் மேற்கொண்டனர்.

இரண்டாம் கட்டமாக அடுத்தும் பிரசாரத்துக்கு வர உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி பிரசாரத்தின்போது பா.ஜ.க “ஏ’ டீம் எனக்கூறி சி.பி.எம், காங்கிரஸ் கட்சிகளை அட்டாக் செய்தார்.

ராகுல் காந்தி பிரசாரத்தின்போது சபரிமலை தங்கம் கொள்ளை பற்றி பிரதமர் மோடி மறந்துவிட்டார் எனவும், கம்யூனிஸ்ட் ஆட்சி தொடர வேண்டும் என மோடி விரும்புவதாகவும் கூறியிருந்தார்.

மேலும், ரப்பருக்கு அடிப்படை ஆதாரவிலையை 250 ரூபாயாக நிர்ணயிப்பதாக 2016-ல் வாக்குறுதி அளித்த சி.பி.எம் அதை நிறைவேற்றவில்லை எனவும் விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் சி.பி.எம் பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் கேரளாவில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது எர்ணாகுளம் பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அதானி, அம்பானி மற்றும் அமெரிக்காவும்தான் பிரதமர் நரேந்திர மோடியின் ‘ஏ’ டீம். டொனால்ட் டிரம்ப் ஈரானை முதலில் தாக்கியபோதும், இஸ்ரேல் பாலஸ்தீனத்தைத் தாக்கியபோதும் மௌனம் காத்தவர் மோடி.

மோடியின் வாயைப் பூட்டி அதன் சாவியை அமெரிக்க அதிபரிடம் கொடுத்தது போல் உள்ளது.

பிருந்தா காரத் கேரளத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்

பிருந்தா காரத் கேரளத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்

பா.ஜ.க மற்றும் வகுப்புவாதத்திற்கு எதிராக சமரசமற்ற நிலைப்பாட்டை எடுப்பவர்கள் சி.பி.எம் கட்சியினர். இதனை மறைத்து ‘டீல்’ என்று கூறி பா.ஜ.க-வும் காங்கிரஸும் பொய்ப் பிரசாரம் செய்கின்றன.

Source link