யமுனை நதியில் படகு கவிழ்ந்து சுற்றுலா பயணிகள் 9 பேர் பலி

மதுரா: யமுனை நதியில் படகு கவிழ்ந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

பஞ்சாபை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர் உபி மாநிலம் மதுராவில் யமுனை நதியில் படகில் சென்றனர். அதில் எதிர்பாராத விதமாக படகு நதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.உடனடியாக தகவலறிந்த மீட்புப்படையினர் அந்த இடத்திற்கு வந்து தண்ணீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் 9 பேர் உயிரிழந்த நிலையில் 17 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் மாநில பேரிடர் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

Source link