“யாருக்கும் அருகதை இல்லை”; இயக்குநர் செல்வராகவன் காட்டம்

தமிழ் சினிமாவின் தனித்துவம் வாய்ந்த இயக்குநர்களில் ஒருவராக அறியப்படுபவர் செல்வராகவன்.  இவரது திரைப்படங்கள் பெரும்பாலும் வழக்கமான சினிமா பாணியில் இருந்து விலகி, இயல்பான மனிதர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும். அதைப் போலவே, அவ்வப்போது அவர் தெரிவிக்கும் கருத்துக்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், அதே சமயம் அனைவராலும் கவனிக்கப்படும் வகையிலும் அமையும். 

அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது. அதில், “உங்களால் முடியாது. உங்களுக்கு அந்த அளவிற்குத் திறமையில்லை. நீங்க என்னதான் முயற்சி பண்ணாலும், உங்களால் அந்த உயரத்தை அடைய முடியாது என்று நம்மைக் குறித்து மதிப்பிடுபவர்களைப் பற்றி நாம் கவலைப் படத் தேவையில்லை. தன்னிடம் ஆயிரம் குறைகளை வைத்துக்கொண்டு மற்றவர்களை நோகடிப்பவர்களை, நாம் ஒருபோதும் பொருட்படுத்தத் தேவையில்லை. 

மனதில் நம்பிக்கை வைத்து உழைத்தால், லட்சியம் தானே கை கொடுக்கும். அதனால், பிறரின் மோசமான வார்த்தைகளில் நாம் வீழ்ந்து விட வேண்டாம். அவ்வாறு, பிறர் கூறும் எதிர்மையான கருத்துக்களைப் பற்றி யோசித்து, அதில் நாம் சிக்கிக்கொண்டால் நமது வாழ்க்கை ஒரே இடத்தில் தேங்கிவிடும். நம்மைப் பற்றியும்,  நமது திறமையைப் பற்றியும் குறைத்து மதிப்பிட இங்கு யாருக்கும் அருகதை இல்லை” என்று தெரிவித்துள்ளார். இது ரசிகர்களுக்குத் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாகப் பலரும் கருது தெரிவித்து வருகின்றனர்.  

Source link