யார் இந்த அரசகுமார்? தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி- வடபழனி, போரூரில் போட்ட மாஸ்டர் பிளான் – tamil nadu private schools association arasakumar cheating rs 100 crore case for recognition upgradation dtcp rte

தனியார் பள்ளிகளிடம் பல்வேறு விதமான அனுமதிகளை பெற்று தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் அரசகுமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பான விசாரணையில் பலர் சிக்கி வருகிறார்கள். இதன் காரணமாக விசாரணை மேலும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, அனைத்து துறைகளிலும் லஞ்சம், ஊழல் குறைந்து விட்டதாக பேசப்படுகிறது. குறிப்பாக பள்ளிக் கல்வித்துறையில் புதிதாக தனியார் பள்ளிகள் அனுமதி பெறுவதற்கு கடந்த ஆட்சியில் பல கோடி ரூபாய் லஞ்சம் வாங்கப்பட்டது என்றும், நடப்பாண்டில் எந்தவித லஞ்சமும் இன்றி உடனடியாக ஒப்புதல் கிடைத்து வருவதாகவும் பல்வேறு சங்க நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தனியார் பள்ளிகளிடம் 100 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தனியார் பள்ளிகளிடம் மோசடி செய்த போலி கூட்டமைப்பு

தமிழ்நாடு பிரைவேட் ஸ்கூல்ஸ் அசோசியேஷன் என்ற பெயரில் கூட்டமைப்பு ஒன்றை பி.டி.அரசகுமார் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர். இந்த கூட்டமைப்பின் தலைவராக அரசகுமார் இருந்துள்ளார். ஆனால் இதனை பதிவு செய்யவில்லை. இவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளி நிர்வாகிகள் உடன் தொடர்ச்சியாக தொடர்பில் இருந்துள்ளனர். அரசிடம் இருந்து நிரந்தர அங்கீகாரம், பள்ளிகளின் தர உயர்வு சான்று, DTCP மற்றும் கட்டிட அனுமதி, RTE மூலம் அனுமதி எனப் பல்வேறு விதமான அனுமதிகளை பெற்று தருகிறோம் என்று நம்பிக்கை அளித்துள்ளனர்.

TVK அரசின் புது சாதனை!ஒரே TENDER க்கு 9 பேர் போட்டி! யாரும் செய்யாததை செய்யும் CM

சென்னை கிரைம் பிராஞ்சில் புகார்

ஒவ்வொரு பள்ளியிடம் இருந்தும் பல லட்சங்களை வாங்கி கொண்டனர். ஆனால் உரிய நேரத்தில் அரசிடம் இருந்து அனுமதி பெற்று தரவில்லை. இதனால் தனியார் பள்ளி நிர்வாகிகள் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். ஆனால் அரசகுமார் தரப்பினர் தரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தனியார் பள்ளிகள் சம்பந்தப்பட்ட கூட்டமைப்பின் மீது சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது.

சிக்கிய அரசகுமார் மற்றும் கூட்டாளிகள்

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான அரசகுமாரை கடந்த ஜூன் 27ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைத்தனர். அதன்பிறகு 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டது. இதில் அரசகுமார் மற்றும் அவரது நண்பர்கள் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வாங்கி தருவதாக பொய்யான வாக்குறுதிகளை அளித்து பணம் வாங்கியது தெரிய வந்தது.

வடபழனி, போரூரில் ஸ்கெட்ச் போட்ட கும்பல்

இதற்காக வடபழனியில் ஒரு தனியார் விடுதி மற்றும் போரூரில் உள்ள திருமண மண்டபம் ஆகியவற்றில் சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு வரவழைக்கப்பட்டு தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் பணம் வசூலிக்கப்பட்டது. சிலரிடம் மிரட்டி பணம் வசூலித்ததும் தெரிய வந்தது. மோசடியின் தீவிரத்தை உணர்ந்த போலீசார் ஜூலை 13ஆம் தேதி அன்று அரசகுமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைத்தனர். இவர்கள் மோசடி செய்த பணத்தை பறிமுதல் செய்யும் நோக்கில், அரசகுமார் மற்றும் அவருடன் தொடர்புடைய நபர்களின் 61 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. மொத்தம் 190 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன.

அரசகுமாருக்கு உடந்தையாக செயல்பட்டு கைதானவர்கள்

பெயர் விவரங்கள் ஆரோக்கியராஜ் வயது 39, தந்தை பெயர் அருள் ஜெயபால், சோலை அழகுபுரம், மதுரை சுரேஷ் வயது 49, தந்தை பெயர் சந்திரன், ஸ்ரீரங்கம், திருச்சி இவர்கள் அனைவரையும் நேற்றைய தினம் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் வேறு யாரேனும் ஆதாயம் பெற்றார்களா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. தவெக ஆட்சியில் லஞ்சம் தொடர்பான முறைகேடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அரசகுமார் மட்டுமின்றி இன்னும் பலர் விரைவில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link