ஓசூர்: குருவை கடவுளின் சொரூபமாக பார்க்கும் நம்மை அயோக்கியன்,முட்டாள், காட்டுமிராண்டி என சொல்லும் பகுத்தறிவாளர்கள் தான் அயோக்கியன், காட்டுமிராண்டி, முட்டாள் என ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சத்சங்கம் சார்பில் உடுப்பி பெஜாவர் மடத்தின் மடாதிபதி விஸ்வ பிரசன்ன தீர்த்த சுவாமிக்கு குரு வந்தனம் எனப்படும் குருவழிபாடு நிகழ்ச்சி நடநதது.
இதில் ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேசியதாவது: குரு என்ற தத்துவம் ஒன்றுதான். கடவுள் காலை பிடிப்பது கஷ்டம். குருவின் காலை பிடிப்பது சுலபம். உதவியற்ற சூழ்நிலையில், நமக்கு தைரியம், கை கொடுப்பது என்றால் குருநாதரின் அருளால் மட்டும் முடியும். தமிழகத்தில் பகுத்தறிவாளர்கள் என சொல்கின்றனர். அவர்கள், நாம் குருவை கடவுளின் சொரூபமாக பார்ப்பதினால் நம்மை அயோக்கியன், முட்டாள், காட்டுமிராண்டி என சொல்லலாம். ஆனால், நான் சொல்கிறேன். அப்படி சொல்பவர்கள் தான் அயோக்கியன், காட்டுமிராண்டி, முட்டாள். இவ்வாறு அவர் பேசினார்.
