‘யார் சொன்னாலும் நம்பாதீர்கள்’ – கூட்டணி இல்லை என்பதில் விஜய் திட்டவட்டம்

“அந்தக் கூட்டணி, இந்தக் கூட்டணிக்குப் போகிறார் என பொய் பிரச்சாரம் செய்தார்கள். யார் என்ன சொன்னாலும் நம்பாதீர்கள்’’ என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார். இதன் மூலம் தவெக யாரோடும் கூட்டணி இல்லை என்பதை விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், காங்கிரஸ் கட்சி தவெக கூட்டணிக்கு வரும் என விஜய் தரப்பு பெரிதும் எதிர்பார்த்தது. ஆனால் அது நடக்கவில்லை. இதையடுத்து, தவெக – பாஜக இடையே கூட்டணி அமையலாம் என்றும், அமித்ஷா இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் என்றும் தகவல்கள் கசியத் தொடங்கின.இந்த சர்ச்சைகளுக்கும் விஜய் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Source link