பாங்காக்: ‘பியூட்சர்ஸ்’ கோப்பை யூத் குத்துச்சண்டை பைனலுக்கு இந்தியாவின் சந்திரிகா, ஜாய்ஸ்ரீ தேவி உள்ளிட்டோர் முன்னேறினர்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், உலக குத்துச்சண்டை ‘பியூட்சர்ஸ்’ கோப்பை (19 வயது) தொடர் நடக்கிறது. பெண்களுக்கான 51 கிலோ பிரிவு அரையிறுதியில் அசத்திய இந்தியாவின் சந்திரிகா பூஜாரி, மொராகோவின் ரிஹாப் ஹம்துானை வீழ்த்தினார்.
பெண்களுக்கான 48 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் குஞ்சன் 5-0 என, வடகொரியாவின் யூ கியோங் கிம்மை தோற்கடித்தார். இந்திய வீராங்கனை ஜாய்ஸ்ரீ தேவி (54 கிலோ), மெக்சிகோவின் சோபியா ராமிரெசை வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தார்.
மற்றொரு இந்திய வீராங்கனை ராதாமணி லாங்ஜம் 2-3 என, உக்ரைனின் யெவன்ஹெலினா பெட்ருக்கிடம் தோல்வியடைந்து வெண்கலம் வென்றார்.
ஆண்களுக்கான 50 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அம்பேகர் 5-0 என உஸ்பெகிஸ்தானின் அப்துகனி யோர்கின்ஜோனோவை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார்.
இத்தொடரில் இந்திய நட்சத்திரங்கள் 4 பேர் பைனலுக்கு தகுதி பெற்றனர்.
