‘யூத்’ பட ஓடிடி அப்டேட்!

பார்வதா என்டர்மெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி. ராம் தயாரிப்பில்,   கென் கருணாஸ் நாயகனாக நடித்து இயக்க, பள்ளி பருவ வாழ்க்கையை மையமாக  கொண்டு கடந்த மார்ச் 19-ஆம் தேதி வெளியான படம் ‘யூத்’. இப்படத்தில் சிறை படம் மூலம் பாராட்டுகளை அள்ளிய அனிஷ்மா மற்றும் மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களோடு  சுராஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இதில் இடம் பெற்ற ‘முட்ட கலக்கி’ பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் 11 நாட்களில் ரூ.50 கோடி வசூலைக் கடந்து வெற்றி பெற்றுள்ளது. இதனையொட்டி சமீபத்தில் நன்றி தெரிவிக்கும் விழா படக்குழு நடத்தியது. இப்படம் தற்போது நான்காவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. அதில் தமிழகம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ஏப்ரல் 16ஆம் தேதி நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அதில் தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகிறது. திரையரங்குகளில் வெளியாகி இக்கால இளைஞர்களை கவர்ந்த இப்படம் ஓடிடி-யிலும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link