மேகதாது அணை கட்டும் விஷயத்தில் கர்நாடகா அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக தமிழகம் கொந்தளிப்பான சூழலில் காணப்படுகிறது. இந்நிலையில் We the leaders அமைப்பின் அண்ணாமலை அவர்கள் மத்திய பாஜக அரசை கேள்விகளால் துளைத்தெடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பாஜக அரசை எதிர் நிலையில் நின்று அண்ணாமலை கேள்வி கேட்பார் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு யாராவது நினைத்து பார்த்ததுண்டா? அப்படியான சூழல் தான் தற்போது அரங்கேறி கொண்டிருக்கிறது. We the Leaders அமைப்பின் தலைவராக தமிழர்களின் உரிமைக்காக தமிழ் மண்ணில் இருந்து குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளார். குறிப்பாக மேகதாது அணை கட்டும் கர்நாடகா அரசின் திட்டம் தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவு பெரிதும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
ஜல் சக்தி துறை அமைச்சகம் தகவல்
ஏனெனில் தேர்தல் ஆதாயம் தேடுகிறீர்களா, யூ-டர்ன் அடிக்கும் வகையில் ஏன் மாற்றி மாற்றி பேச வேண்டும், எங்கள் விவசாயிகளின் வாழ்க்கையை புரட்டி போடும் முடிவை எடுத்து விடாதீர்கள். தேவையின்றி சகோதரத்துவ உணர்வுடன் இருக்கும் மாநிலங்களுக்கு இடையில் மூக்கை நுழைக்க வேண்டாம் என ஒவ்வொரு வார்த்தையையும் அதிரடியாக பயன்படுத்தியுள்ளார். மாநிலங்களவையில் நேற்று ஜல் சக்தி துறை அமைச்சகம் சார்பில் உச்ச நீதிமன்ற உத்தரவு சுட்டிக் காட்டப்பட்டது.
அண்ணாமலை புதிய கட்சி தொடங்கும் வாய்ப்பு… பாஜகவிற்கு கெடு!
அண்ணாமலை அதிரடி கேள்வி
கர்நாடகா அனுமதி பெற தேவையில்லை 16.02.2018ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் அனுமதியை கர்நாடகா பெற தேவையில்லை எனக் கூறப்பட்டுள்ளது. இதை சுட்டிக் காட்டி அவையில் பேசியுள்ளனர். நிபந்தனை அடிப்படையில் அனுமதி ஆனால் 05.07.2021ல் அப்போதைய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகவத் நாடாளுமன்றத்தில் பேசும் போது, மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகாவிற்கு நிபந்தனைகளின் அடிப்படையில் தான் அனுமதி தரப்பட்டது. யூ-டர்ன் அடிச்ச மத்திய அரசு காவிரி நீரை பகிர்ந்து கொள்ளும் மற்ற மாநிலங்களின் அனுமதி என்பது கட்டாயம் என்றார். அப்படியிருக்கையில் ஏற்கனவே எடுத்த முடிவில் இருந்து மத்திய அரசு யூ-டர்ன் அடிக்கும் வகையில் ஏன் மாற்றி பேச வேண்டும். பாஜக அரசின் தேர்தல் கணக்கு கர்நாடகாவில் தேர்தல் ஆதாயம் பெறும் நோக்கில் மத்தியில் ஆளும் பாஜக அரசு செயல்படுகிறதா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். குறைந்தபட்சம் விவசாயிகளின் வாழ்க்கையை மாற்றக்கூடிய முக்கியமான முடிவுகளில் நிலையான கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் காவிரி
தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய இரண்டு மாநிலங்களும் சகோதரத்துவ உணர்வுடன் செயல்பட்டு வருகிறது. எனவே தேவையின்றி அந்த உணர்வை கெடுத்து விடாதீர்கள் எனப் பதிவிட்டுள்ளார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்பது காவிரி நீர் என்பது தமிழக டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம். பல கோடி மக்களின் குடிநீர் தேவையும் அடங்கியிருக்கிறது. எனவே உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மாதந்தோறும் திறந்து விட வேண்டிய நீரை கர்நாடகா அரசு முறையாக வழங்க வேண்டும். இத்தகைய நிலைப்பாட்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒரே புள்ளியில் நிற்கின்றனர். அதில் அண்ணாமலையும் ஒருவர்.
ரூட்டை மாற்றிய அண்ணாமலை
முன்னதாக பாஜக மாநிலத் தலைவராக இருந்த போது, இவர் முன்வைத்த அதிரடியான கருத்துகள் பெரிதும் கவனம் பெற்றன. மீடியாக்களில் தினசரி தலைப்பு செய்தியாக மாறின. தற்போது தனது அணுகுமுறையில் நிறைய மாற்றங்களை செய்துள்ளார். குறிப்பாக பாஜகவின் ஆசியுடன் தான் தனிக்கட்சி தொடங்கும் திட்டங்களை முன்னெடுத்து வருவதாக விமர்சனங்கள் எழும் நிலையில், தமிழ் மக்களின் உரிமைகளுக்காக அக்கட்சியை எதிர்க்கும் நிலைப்பாடு வரவேற்கும் வகையில் அமைந்திருக்கிறது.
Source link
