ரஜினிகாந்த் தர்மன் படத்தில் நயன்தாரா: 5வது முறையாக சேர்ந்த ராசியான ஜோடி, ஆனால்…

நயன்தாரா , ரஜினிகாந்த் : அஸ்வத் மாரிமுத்து இயக்கி வரும் தர்மன் படப்பிடிப்பின் மூன்றாவது கட்டம் முடிந்த நிலையில் நயன்தாராவை கொண்டு வந்திருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக சிம்ரன் நடித்து வருகிறார். அப்படி இருக்கும்போது நயன்தாராவுக்கு என்ன வேலை என்று ரசிகர்கள் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.

எது எப்படியோ சூப்பர் ஸ்டார் படத்தில் நயன்தாரா மீண்டும் நடிப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. முன்னதாக சந்திரமுகி, குசேலன், தர்பார், அண்ணாத்த ஆகிய படங்களில் ரஜிகாந்த் உடன் நடித்தார் நயன்தாரா. தற்போது ஐந்தாவது முறையாக அவருக்கு ரஜினி பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

கமல் தயாரிப்பு: விண்வெளி நாயகன் கமல் ஹாசன் தன் நண்பர் படத்தை தயாரித்து வருகிறார். முன்னதாக பேட்ட படம் பார்த்தவர்கள் ரஜினிகாந்த், சிம்ரன் இடையே காட்சிகளை இன்னும் அதிகமாக வைத்திருக்கலாம் என ஃபீல் செய்தார்கள். கவலைப்படாதீங்க கண்ணா, அதற்கும் சேர்த்து தர்மனில் எங்கள் காம்பினேஷன் காட்சிகள் வரும் என ரஜினிகாந்த் உறுதி அளித்திருக்கிறார்.

பட வேலை பெரும்பாலும் முடிந்த நேரத்தில் நயன்தாரா வந்திருப்பதால் அவர் தலைவருக்காக சிறு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் போன்று என ரசிகர்கள் பேசுகிறார்கள். நயன்தாரா நடிப்பதை அறிவித்த தயாரிப்பு நிறுவனம், அவரின் கதாபாத்திரம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

டிசம்பர் வரை வேலை: தர்மன் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தான் முடியும் என டூரிங் டாக்கீஸ் தெரிவித்துள்ளது. இதற்கிடையே தர்மன் படத்தின் இசையமைப்பாளரான அனிருத் ரவிச்சந்தரின் காதல் திருமணத்தில் கலந்து கொள்ள கிரீஸ் செல்கிறார் ரஜினிகாந்த்.

அஸ்வத் மாரிமுத்து சூப்பர் ஸ்டாரின் ரசிகர் ஆவார். அப்படி இருக்கும் போது ரஜினிகாந்த் பட வாய்ப்பு கிடைத்த சந்தோஷத்தில் தர்மன் படத்தை பார்த்துப் பார்த்து இயக்கி வருகிறார். இந்நிலையில் அஸ்வத் வேலை செய்யும் விதம் ரஜினிக்கு பிடிக்கவில்லை. இதனால் இயக்குநருக்கும், அவருக்கும் இடையே மனஸ்தாபம் என ஒரு ட்வீட் வந்து வைரலானது. அதை பார்த்த ரஜினிகாந்தின் மேனேஜர் ரியாஸ் அகமதோ, அது பொய்யான தகவல். ரஜினி சாருக்கு அஸ்வத் வேலை பார்க்கும் ஸ்டைல் ரொம்ப பிடித்திருக்கிறது. தர்மன் படப்பிடிப்பு நல்லபடியாக நடந்து கொண்டிருக்கிறது என்று விளக்கம் அளித்தார்.

ஜெயிலர் 2: ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் வெளியாகி உலக அளவில் ரூ. 700 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கும் ஜெயிலர் 2 படத்தை பார்த்துவிட்டு ரஜினிகாந்த், நெல்சன் திலீப்குமார், அனிருத்தை பாராட்டி ட்வீட் செய்திருந்தார் அஸ்வத் மாரிமுத்து.

அது மட்டும் அல்ல ஜெயிலர் 2 படம் சூப்பர் ஹிட்டான பிறகு நெல்சனும், அனிருத்தும் ரஜினிகாந்தை அவரின் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள். அது குறித்து நெல்சன் திலீப்குமார் போட்ட ட்வீட்டை பார்த்துவிட்டு ஃபயர் விட்டிருந்தார் அஸ்வத். அப்படிப்பட்டவரை எப்படி ரஜினிகாந்துக்கு பிடிக்காமல் போய்விடும். இல்லை ரஜினி மீது வருத்தம் இருக்கும் ஆள் இப்படி பாராட்டத் தான் செய்வாரா?. ரஜினிக்கும், அஸ்வத் மாரிமுத்துவுக்கும் இடையே பிரச்சனையே கிடையாது.

சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்

அஸ்வத் அப்டேட்ஸ்: தர்மன் அப்டேட் எதுவும் இருக்கா பாஸ் என ரசிகர்கள் கேட்கும் முன்பே கொடுக்கும் இயக்குநராக இருக்கிறார் அஸ்வத் மாரிமுத்து. இது தான் அவரிடம் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த விஷயமாக இருக்கிறது.

Source link