புதுடில்லி: ரயில் சரக்கு போக்குவரத்து, கடந்த பிப்ரவரி மாதத்தில் 13.77 கோடி டன் ஆக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டைவிட இது 4 சதவீதம் அதிகம் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இதன் வாயிலாக 2.97 சதவீத வருவாய் வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.
‘நிகர டன் கிலோமீட்டர்’ அளவு, 7600 கோடியாக அதிகரித்து இருக்கிறது. இது, முந்தைய ஆண்டைவிட 4.18 சதவீத வளர்ச்சி ஆகும். ஒரு குறிப்பிட்ட அளவு எடையுள்ள சரக்கை, எவ்வளவு தூரம் கொண்டு சென்றோம் என்பதை கணக்கிடுவதே நிகர டன் கிலோமீட்டர் ஆகும்.
![]() |
இது வெறும் எடையையோ அல்லது தூரத்தையோ மட்டும் கணக்கில் கொள்ளாமல், இரண்டையும் இணைத்து அந்த பயணத்தின் மொத்த பயன்பாட்டை குறிக்கிறது. நிலக்கரி, ஸ்டீல், உரம் ஆகியவை அதிக அளவில் அனுப்பப்படுவதே இந்த வளர்ச்சிக்குக் காரணம் ஆகும்.
இவைதவிர சிமெண்ட், உணவு தானியங்கள், கன்டெயினர்களும் ரயில்கள் வாயிலாக அனுப்பப்படுகின்றன.

