ரஷ்ய ராணுவ உளவு பிரிவு துணை தலைவர் மீது துப்பாக்கி சூடு

மாஸ்கோ: ரஷ்யாவின் ராணுவ உளவு பிரிவு துணை தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் விளாடிமிர் அலெக்ஸீவ் மீது மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில், அவர் படுகாயமடைந்தார்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ராணுவ உளவு பிரிவு துணை தலைவர் விளாடிமிர் அலெக்ஸீவ் வசித்து வந்தார். இங்கு மறைந்திருந்த மர்ம நபர் ஒருவர் அலெக்ஸீவ் வெளியே வந் த போது துப்பாக்கியால் பலமுறை சுட்டார்.

இதில் அலெக்ஸீவ் முதுகு பகுதியை குண்டு துளைத்ததில் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுட்டவர் தப்பியோடி விட்டார்.

அலெக்ஸீவ், கடந்த 2011 முதல் ரஷ்ய ராணுவ உளவு பிரிவின் துணை தலைவராக பணியாற்றி வ ருகிறார். சிரியா மற்றும் உக்ரைன் போர்களில் முக்கிய பங்காற்றியவர்.

ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தத்துக்கான முத்தரப்பு பேச்சு மேற்கு ஆசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து முடிந்த மறுநாள் இச்சம்பவம் நடந்தது சர்ச்சையாகி உள்ளது.

இத்தாக்குதலுக்கு உக்ரைனே காரணம் என ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது. இதற்கு உக்ரைன் சார்பில் இதுவரை பதிலளிக்கவில்லை. ரஷ்யாவின் மூத்த ராணுவ அதிகாரிகள் மீது கடந்த சில மாதங்களில் நடத்தப்படும் நான்காவது முக்கிய தாக்குதல் இது.

ரஷ்ய புலனாய்வு குழு இச்சம்பவம் குறித்து விசாரணையை துவங்கிஉள்ளது.

Source link