ராஜசேகர் பொண்டாட்டி நான்தான்’னு நோட்டிசா அடிச்சு ஒட்ட முடியும்? தாரா / issues in thara rajasekaran’s request to tamilnadu government

மறைந்த நடிகர் ராஜசேகரனின் மனைவி தாரா, தன்னுடைய திருமண பதிவு சான்றிதழின் நகல் கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில், நகல் தர இயலாது என பதில் தந்திருக்கிறது பதிவுத்துறை.

ஒளிப்பதிவாளரும் நடிகருமான ராஜசேகரன் கோவிட் காலத்தில் மரணமடைந்தார். இறக்கும் போது சென்னை வடபழனியில் வங்கியில் கடன் வாங்கி வீடு ஒன்றை வாங்கியிருந்ந்தார். திடீரென அவர் இறந்த நிலையில், அவரது மனைவி தாராவால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போகவே, வீட்டை வங்கி ஏலம் விட்டு விட்டது.

தொடர்ந்து தனக்கு குடியிருக்க வீட்டு வசதி வாரியத்தின் மூலம் ஒரு வீடு ஒதுக்கித் தரவேண்டி முதல்வர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு மனு அளித்து வந்தார்.

இது தொடர்பாக விகடன் தளத்திலும் செய்தி வெளியிட்டிருந்தோம்.

முதல்வர் அலுவலகமும் அந்த மனுக்கள் மீது விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதாக கூறப்பட்டது.

ஆனாலும் எந்தவொரு உதவியும் தாராவுக்கு கிடைக்கவில்லை.

Source link