ராஜா 'ஆடியோ'; தி.மு.க., அதிர்ச்சி

– நமது நிருபர் –

தி.மு.க., துணை பொதுச்செயலர் ராஜா உட்கட்சி விவகாரம் தொடர்பாக பேசிய, இரண்டு பழைய ஆடியோக்கள் வெளியாகி உள்ளதால், ஆளும் கட்சி தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது.

இது குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:சில ஆண்டுகளுக்கு முன் பேசியதாக, இரண்டு ஆடியோ பதிவுகள் வெளியானதை வைத்து, எதிர்க்கட்சிகள் பிரச்சாரத்தில் பேசி வருகின்றன. இந்த ஆடியோக்களால் தி.மு.க.,வுக்கு பின்னடைவு ஏற்படுமோ என்ற கவலையும், கட்சி தலைமைக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும், 2ஜி விவகாரம் தொடர்பாகவும், தி.மு.க., உட்கட்சி விவகாரம் தொடர்பாகவும், ராஜா பேசிய பழைய ஆடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இதன் பின்னணியில், தனக்கு எதிராக செயல்படும் அமைச்சர் ஒருவர் இருப்பதாக, ராஜா சந்தேகப்படுகிறார். இதையடுத்து, ராஜா கட்சியில் இருந்து ஓரங்கட்டப்படும் நிலை உருவாகி இருக்கிறது. இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

Source link