ராஜ்யசபாவுக்கு தமிழகத்தில் இருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வு

சென்னை: ராஜ்யசபாவுக்கு தமிழகத்தில் இருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள ஆறு ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கான தேர்தல், வரும், 16ம் தேதி நடக்கும் என, இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. எம்எல்ஏக்கள் எண்ணிக்கை அடிப்படையில், திமுகவிற்கு நான்கு, அதிமுகவிற்கு இரண்டு ராஜ்யசபா எம்பிக்கள் பதவி கிடைப்பது உறுதியானது. திமுக கூட்டணியில், தேமுதிக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டது.

திமுகவில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்; தேமுதிக சார்பில் சுதீஷ், காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதிமுக சார்பில் தம்பிதுரை, அக்கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அன்புமணி மனு தாக்கல் செய்தனர். அவர்கள் மனு ஏற்கப்பட்டு, மற்றவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மனுவை திரும்ப பெற, இன்று மாலை 3:00 மணி வரை, அவகாசம் வழங்கப்பட்டது. ஆறு பேர் தவிர, மற்றவர்கள் யாரும் களத்தில் இல்லை.

இதனையடுத்து திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், சுதீஷ், கிறிஸ்டோபர் திலக், தம்பிதுரை, அன்புமணி ஆகியோர் ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக ராஜ்யசபா தேர்தல் நடத்தும் அதிகாரி சாந்தி அறிவித்துள்ளார்.

சான்றிதழ்

இதனைத் தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அதிகாரி சாந்தியிடம் இருந்து தம்பிதுரை மற்றும் அன்புமணி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

Source link