ராஜ்யசபா எம்.பி., பதவியேற்பில் தி.மு.க.,வை பின்பற்றிய அன்புமணி

சென்னை: தமிழகத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வான ஆறு பேரும், டில்லியில் பதவியேற்றனர். அவர்களுக்கு, துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அ.தி.மு.க., தம்பிதுரை, காங்கிரஸ் – கிறிஸ்டோபர் மாணிக்கம், தே.மு.தி.க., – சுதீஷ் ஆகியோர், ‘கடவுளின் பெயரால்’ எனக்கூறி எம்.பி., பதவியேற்றனர். ஆனால், தி.மு.க.,வின் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர், உளமாற உறுதி கூறி பதவியேற்றனர். அ.தி.மு.க., – பா.ஜ., கூட்டணியில், ராஜ்யசபா எம்.பி.,யான, பா.ம.க., தலைவர் அன்புமணி, தி.மு.க.,வினரைப்போல, ‘கடவுளின் பெயரால்’ என கூறாமல் பதவியேற்றார்.

தி.மு.க.,வினர் சிலர் கடவுள் மறுப்பு கொள்கையை கொண்டவர்கள் என்பதால், எம்.பி., – எம்.எல்.ஏ., அமைச்சர், முதல்வர் என, எந்தப் பதவியேற்பிலும், கடவுளின் பெயரால் உறுதிமொழி ஏற்பதில்லை. ஆனால், அன்புமணி அடிக்கடி கோவிலுக்குச் செல்பவர். ஆனாலும், ராஜ்யசபா எம்.பி.,யாக பதவியேற்றபோது, தி.மு.க.,வை பின்பற்றியது, சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

Source link