கூடுதலாக, அன்புமணி தரப்புக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து ராமதாஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒரிரு நாட்களுக்குள் வழக்கை விசாரித்து முடித்துவைக்க உத்தரவிட்டது.
இதனிடையே, மாம்பழம் சின்னம் ஒதுக்கியது தொடர்பாக உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி, ராமதாஸ் தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் இன்று (செவ்வாய்க் கிழமை) முறையீடு செய்யப்பட்டது.
இதனை மனுவாக தாக்கல் செய்தால், வழக்கு நாளை விசாரணைக்கு எடுக்கப்படும் எனக் கூறிய நீதிபதி எம்.தர்மபிரபு, அப்படி ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்படும் மனுவின் நகலை அன்புமணி தரப்புக்கு வழங்கவும் உத்தரவிட்டார். இதனிடையே, இன்று பிற்பகல் மனுவாக தாக்கல் செய்யப்படும் என ராமதாஸ் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
