ராமநாதபுரம்: குவைத்தில் உள்ள அமெரிக்கா படையை நோக்கி ஈரான் தாக்குதல் நடத்தியதில் முதுகுளத்துார் இளைஞர்

ராமநாதபுரம்: குவைத்தில் உள்ள அமெரிக்கா படையை நோக்கி ஈரான் தாக்குதல் நடத்தியதில் முதுகுளத்துார் இளைஞர் பலியானார். சொந்த ஊருக்கு உடலை கொண்டு வர கலெக்டரிடம் குடும்பத்தினர் மனு அளித்தனர்.

ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங்காலோனிடம் முதுகுளத்துார் அருகே உள்ள அனிகுருந்தான் கிராமத்தை சேர்ந்த கவுசல்யா மனு அளித்தார்.

அந்த மனுவில் அவர் தெரிவித்திருப்பதாவது. எனது கணவர் சந்தானம் செல்வம் (36) குவைத்தில் உள்ள ஒரு தனியார் எண்ணெய் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வேலை பார்த்து வருகிறார். இன்று (மார்ச் 30ந்தேதி) இந்திய துாதரகத்தில் இருந்து எனக்கு போனில் பேசிய அதிகாரிகள் சந்தானம் செல்வம் இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும் எங்களுக்கு ஆண்,பெண் என இரண்டு குழந்தைகளும், அவரின் வயதான பெற்றோரும் உள்ளனர். எனவே சந்தானம் செல்வம் உடலை சொந்த ஊர் கொண்டு வர கலெக்டர் மத்திய, மாநில அரசுகள் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்தநாட்டிலிருந்து இழப்பீடு, நிவாரணம் பெற்றுதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link