ராஷ்மிகாவுக்கு பங்களா பரிசு!

கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த நட்சத்திர ஜோடியான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவும் கடந்த பிப்ரவரி 26ஆம் திருமணம் செய்து கொண்டனர். இத்திருமணம் உதய்பூரில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொள்ள நடந்தது. பின்பு கடந்த மாதம் 4ஆம் தேதி ஹைதராபாத்தில் வரவேற்பு நிகழ்ச்சி திரை பிரபலங்கள் கலந்து கொள்ள பிரம்மாண்டமாக நடந்தது. 

இதையடுத்து ராஷ்மிகா தனது 30வது பிறந்தநாளை கடந்த 5ஆம் தேதி கொண்டாடினார். இதையொட்டி கர்நாடகாவில் உள்ள தனது சொந்த கிராமமான விராஜ்பேட்டையில் சிறிய கொண்டாட்ட நிகழ்வை நடத்தினார். திருமணத்திற்குப் பிறகு இது தனது முதல் பிறந்தநாள் என்பதால், அவர் விஜய் தேவரகொண்டாவுடன் இந்த பிறந்தநாளை கொண்டாடினார். அடுத்த நாள் அப்பகுதியில் இருக்கும் ஒரு கன்வென்ஷன் செண்டரில் ராஷ்மிகா குடும்பத்தினர் ஒரு சிறிய வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தினர். இதில் ராஷ்மிகா அவரது சமூகமான கொடவா சமூக பாரம்பரிய உடை அணிந்து கலந்து கொண்டார். 

தந்தை மதன் மந்தனாவுடன் ராஷ்மிகா

அந்நிகழ்வில் ராஷ்மிகாவின் தந்தை மதன் மந்தனா, ஒரு சர்ப்ரைஸ் கொடுத்தார். அதாவது ராஷ்மிகாவுக்கு ஒரு பங்களாவை பரிசாக கொடுப்பதாக அறிவித்தார். அந்த பங்களா விராஜ்பேட்டைக்கு அருகில் உள்ள ஒரு இடத்தில் இருக்கிறது. அந்த பங்களாவிற்கு ‘செரினிட்டி’ என பெயரும் சூட்டியுள்ளனர். இந்த அறிவிப்பு அங்கிருந்த அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 

Source link