ராஷ்மிகா, வைதேகி விலகல்: பில்லி ஜீன் கிங் டென்னிசில்

புதுடில்லி: பில்லி ஜீன் கிங் கோப்பை டென்னிஸ் போட்டியில் இருந்து இந்தியாவின் ராஷ்மிகா, வைதேகி, காயத்தால் விலகினர்.

டில்லியில், பில்லி ஜீன் கிங் கோப்பை டென்னிஸ், ‘ஆசிய-ஓசியானியா குரூப்-1’ பிரிவு போட்டிகள் நாளை துவங்குகின்றன. இதில் இந்தியா, இந்தோனேஷியா, தென் கொரியா, மங்கோலியா, நியூசிலாந்து, தாய்லாந்து அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை ‘ரவுண்டு-ராபின்’ முறையில் மோதும். முடிவில், ‘டாப்-2’ இடம் பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

இதற்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த ஸ்ரீவள்ளி ராஷ்மிகா (முதுகு பகுதி), வைதேகி சவுத்ரி (கணுக்கால்) காயம் காரணமாக இப்போட்டியில் இருந்து விலகினர். இவர்களுக்கு பதிலாக ஜீல் தேசாய் 24, தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், ஐந்து ஆண்டுகளுக்கு பின், பில்லி ஜீன் கிங் கோப்பை தொடரில் களமிறங்க உள்ளார். கடைசியாக 2021ல் நடந்த லாட்வியா அணிக்கு எதிரான ‘பிளே-ஆப்’ போட்டியில் அறிமுகமானார். இதனை, இந்திய அணி கேப்டன் விஷால் உப்பால் உறுதி செய்தார்.

Source link