ரா மநாதபுரம் தொகுதியில் வெற்றி பெறும் கட்சியே ஆட்சி அமைக்கும் என, ஒரு நீண்டகால வரலாற்று 'சென்டிமென்ட்'

ரா மநாதபுரம் தொகுதியில் வெற்றி பெறும் கட்சியே ஆட்சி அமைக்கும் என, ஒரு நீண்டகால வரலாற்று ‘சென்டிமென்ட்’ உண்டு. ‘சிட்டிங்’ எம்.எல்.ஏ., காதர்பாட்ஷா, ராமநாதபுரம் தொகுதியை தக்கவைக்க சமீப நாட்களாக சிறுபான்மையினர் மற்றும் தனக்கு சாதகமான ஓட்டு வங்கியை குறிவைத்து சில்வர் அண்டா, தட்டு, டம்ளர், கரண்டிகளை வாரி வழங்கி கவர்ந்தார்.

இவரை எதிர்த்து போட்டியிட அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் மணிகண்டனே சரியான வேட்பாளர் என அ.தி.மு.க.,வினர் மட்டுமின்றி பிற கட்சியினரும் கருதினர். இந்நிலையில், அ.தி.மு.க., உட்கட்சி பூசலால் ராமநாதபுரம் தொகுதி, கூட்டணி கட்சி பா.ஜ.,வுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால், மணிகண்டன், அவரது ஆதரவாளர்கள் மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இச்சூழலில் ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதியில் வசிக்கும் மீனவ சமூகத்தினர், ராமநாதபுரம் தொகுதியை அ.தி.மு.க.,வுக்கு ஒதுக்கக்கோரி, பழனிசாமியை வலியுறுத்தி, தொகுதி முழுதும் ‘போஸ்டர்’ ஒட்டியுள்ளனர். அ.தி.மு.க.,வினர் அதிருப்தியால் கைக்கு எட்டியது வாய்க்கு கிட்டாமல் போய்விடுமோ என, பா.ஜ.,வினர் கலக்கத்தில் உள்ளனர்.

Source link