ரியாத்: ஈரானின் தொடர்ச்சியான தாக்குதல்களை சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம் கண்டித்ததுடன், அந்நாட்டு

ரியாத்: ஈரானின் தொடர்ச்சியான தாக்குதல்களை சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம் கண்டித்ததுடன், அந்நாட்டு தூதரக ஊழியர்கள் 5 பேர் 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறும் உத்தரவிட்டது.

வளைகுடா நாடுகளின் மீதான தாக்குதல்களை ஈரான் நிறுத்த வேண்டும். தொடர்ந்து தாக்கப்பட்டால் ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என சவுதி அரேபியா வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் அல் சவுத் எச்சரித்து இருந்தார். ஆனால் ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை தொடர்ந்து வந்தது. இந்த சூழலில், ஈரானின் தொடர்ச்சியான தாக்குதல்களை சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம் கண்டித்துள்ளது.

ராணுவத் தூதர் உட்பட ஈரான் தூதரக ஊழியர்கள் 5 பேரை விரும்பத்தகாத நபர்கள் (persona non grata) என சவுதி அரேபியா அறிவித்தது. நாட்டை விட்டு வெளியேற அவர்களுக்கு 24 மணி நேரம் அவகாசத்தை சவுதி அரேபியா அரசு விதித்துள்ளதால், அப்பகுதியில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. ஈரானின் தொடர்ச்சியான தாக்குதல் சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானம் ஆகியவற்றின் அப்பட்டமான மீறலாகும்.

இஸ்லாமிய நம்பிக்கையின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கும் எதிரானவை. தனது இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களைப் பாதுகாக்க சவுதி அரேபியா அரசு அனைத்து முக்கியமான நடவடிக்கைகளையும் எடுக்கும்.

தாக்குதல்கள் தொடர்ந்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும். ஈரானின் நடவடிக்கைகள் மோதலை மேலும் தீவிரப்படுத்தி, தற்போதும், எதிர்காலத்திலும் தூதரக உறவுகளைச் சேதப்படுத்தக்கூடும் என சவுதி அரேபியா எச்சரித்துள்ளது.

Source link