ரிஷாப் தேசிய சாதனை * வெண்கலம் வென்று அசத்தல்

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நியூ சவுத் வேல்ஸ் ஸ்டேட் ஓபன் நீச்சல் சாம்பியன்ஷிப் நடந்தது. ஆண்களுக்கான 200 மீ., ‘பேக்ஸ்டிரோக்’ பிரிவு போட்டி நடந்தது. இந்தியா சார்பில் ரிஷாப் தாஸ் பங்கேற்றார்.

பந்தய துாரத்தை 2:00.14 நிமிட நேரத்தில் கடந்த ரிஷாப், வெண்கலப் பதக்கம் வென்றார். தவிர இது புதிய தேசிய சாதனை ஆனது. முன்னதாக கடந்த 2025ல் புவனேஸ்வரில் நடந்த சீனியர் நீச்சல் சாம்பியன்ஷிப்பில், ரிஷாப் 2:00.69 வினாடியில் கடந்து இருந்தார்.

ரிஷாப், 1:57.50 வினாடி நேரத்தில் கடந்திருந்தால், கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கலாம்.

இப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஸ்டூவர்ட் ஸ்வின்பர்ன் (1:58.80), ஹென்றி ஆலன் (1:59.45) முதல் இரு இடம் பெற்று, தங்கம், வெள்ளிப்பதக்கம் வென்றனர்.

Source link