ரிஷாப் மீண்டும் 'வெண்கலம்'

சிட்னி: சர்வதேச நீச்சலில் இரண்டாவது வெண்கலம் வென்றார் இந்தியாவின் ரிஷாப் தாஸ்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நியூ சவுத் வேல்ஸ் ஸ்டேட் ஓபன் நீச்சல் சாம்பியன்ஷிப் நடந்தது. ஆண்களுக்கான 200 மீ., ‘பேக்ஸ்டிரோக்’ பிரிவில் இந்தியாவின் ரிஷாப் தாஸ், தேசிய சாதனையுடன் வெண்கலம் வென்றிருந்தார். நேற்று, 100 மீ., ‘பேக்ஸ்டிரோக்’ பிரிவு போட்டி நடந்தது. ரிஷாப் தாஸ் மீண்டும் அசத்தினார்.

பந்தய துாரத்தை 55.51 வினாடி நேரத்தில் கடந்து மூன்றாவது இடம் பிடிக்க, ரிஷாப் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். விக்டோரியா மாகாணத்தின் ஹென்றி ஆலன் (54.74 வினாடி) தங்கம் கைப்பற்றினார். சிட்னியின் ஸ்டூவர்ட் ஸ்வின்பர்ன் (55.24 வினாடி) வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

Source link