ரூபாய் மதிப்பு – பாஜக போட்டி: அகிலேஷ் யாதவ் விமர்சனம்

இதனால், அக்கட்சியின் பிம்பம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சரிந்து வருகிறது. பாஜகவினர் தொடர்பான பல்வேறு புகார்கள் வெளிச்சத்துக்கு வந்தாலும், யாரும் தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலகுவதில்லை. அந்தக் கட்சி தற்போது தார்மீக ரீதியில் திவால் நிலையின் உச்சத்தை எட்டிவிட்டது.” இவ்வாறு அகிலேஷ் பதிவிட்டுள்ளார்.

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “மத்திய அரசின் தொடர் தவறுகள் மக்களின் துயரத்தை பெரிதும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் போர்ச் சூழல் சாமானியர்களுக்கு மேலும் சவால்களை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நாடு முழுவதும் சமையல் எரிவாயு விநியோகத்தில் தட்டுப்பாடு நிலவுகிறது.

உணவகங்களுக்கு சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இந்நிலையில், மக்களை பாதிக்கும் வகையில் சிலிண்டர் விலை ரூ.60 உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், மக்களுக்கு உதவும் வகையில் நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகளை மட்டும் பாஜக தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது” என்றார்.

Source link