ரூ.100 கோடி திரட்டும் 'ஐ.சி.எல்., பின்கார்ப்'

‘ஐ .சி.எல்., பின்கார்ப்’ நிறுவனம், 100 கோடி ரூபாய் மதிப்பில், பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரங்களை வெளியிட்டு, முதலீட்டாளர்களிடம் இருந்து நிதி திரட்ட முடிவு செய்திருக்கிறது.

இந்த என்.சி.டி., வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட, அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கே.ஜி.அனில்குமார் கூறியதாவது:

“இது எங்களின் 9வது என்.சி.டி., வெளியீடு; இதன் வாயிலாக திரட்டப்படும் நிதியை முழுதும் தங்க நகை கடன் கொடுப்பதற்கு மட்டுமே பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறோம். அதனால் முதலீட்டாளர்களின் பணம் பாதுகாப்பாக இருக்கும்”.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வெளியீட்டு விபரங்கள்: வெளியீட்டு தேதி: ஏப்ரல் 10, 2026 வெளியீடு முடியும் தேதி: ஏப்ரல் 24, 2026 திரட்டப்படும் தொகை: ரூ.100 கோடி குறைந்தபட்ச முதலீடு: ரூ.10,000 (தலா ரூ.1,000 மதிப்புள்ள 10 பத்திரங்கள்) முதலீட்டு காலம்: 13, 24, 36, 60 மற்றும் 72 மாதங்கள் வட்டி வீதம் : 10 -12.25 சதவீதம் வரை வட்டி: மாதாந்திரம், ஆண்டுதோறும் மற்றும் முதிர்வின்போது பெறும் வசதி உள்ளது. கிரெடிட் மதிப்பீடு: ‘பிபிபி-/ஸ்டேபிள் (அக்யுட்)’

Source link