`ரூ.18,000 கோடிக்கு விலை போகிறதா RCB? போட்டிபோடும் இரண்டு நிறுவனங்கள்!

ஐபிஎல் வரலாற்றில் முதன் முறையாக,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2025-ல் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு, அணியின் மவுசு கூடியிருக்கிறது.

தற்போது இந்த அணியின் மதிப்பு சுமார் ₹18,000 கோடி வரை உயர்ந்துள்ளது. இந்த மெகா டீமை வாங்குவதற்கு உலகத் தரம் வாய்ந்த இரண்டு பெரிய நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகின்றன என தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.

2008 ஆம் ஆண்டு இந்த அணியை விஜய் மல்லையா தொடங்கினார், ஆனால் 2016 ஆம் ஆண்டு நிதி சிக்கலின் காரணமாக அணியை United Spirits Limited நிறுவனம் கைப்பற்றி நடத்தி வந்தது.

RCB

தற்போது இந்த நிறுவனமும் அணியை விற்பனை செய்ய உள்ள நிலையில், ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான EQT, இந்தியாவின் விப்ரோ நிறுவனத் தலைவர் அசிம் பிரேம்ஜியின் பிரேம்ஜி இன்வெஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து சுமார் ₹18,000 கோடிக்கு மேல் வாங்க முயற்சி செய்து வருவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனை தொடர்ந்து மணிப்பால் மருத்துவமனை குழுமத்தின் தலைவர் டாக்டர் ரஞ்சன் பாய் தலைமையில், அமெரிக்காவின் KKR மற்றும் சிங்கப்பூரின் டெமாசெக் நிறுவனங்கள் இணைந்து இந்த அணியைக் கைப்பற்ற தீவிரமாக முயன்று வருவதாகவும் கூறப்படுகிறது.

RCB
RCB

மார்ச் 31-க்குள் யார்? RCB அணியை வாங்கப்போகிறார்கள் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. நடப்பு சாம்பியனாக களமிறங்கும் RCB அணிக்கு, புதிய உரிமையாளர் யார் என்பது விரைவில் தெரிந்துவிடும்.!

Source link