ரூ.189 கோடி பணம், பொருட்கள் தேர்தல் பறக்கும் படை பறிமுதல்

சென்னை:”தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், இதுவரை 189 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன,” என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறினார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சட்டசபை தொகுதிகளில் பணியில் ஈடுபட்டுள்ள குழுக்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளன. இன்று மார்ச் 26 ம் தேதி நிலவரப்படி

41.98 கோடி ரூபாய் ரொக்கம்

88 லட்ச ரூபாய் மதிப்புள்ள மதுபானம்

7.24 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள்

115.10 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட உலோகங்கள்

24.53 கோடி ரூபாய் மதிப்புள்ள இதர பொருட்கள் மற்றும் இலவசங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு 189.74 கோடி ரூபாய்.

மாநிலம் முழுவதும் 2169 பறக்கும் படைகள் மற்றும் 2166 நிலை கண்காணிப்புக் குழுக்கள் பணம், மதுபானம் மற்றும் இதர கவர்ச்சி பொருட்கள் விதிமுறைகளை மீறி வழங்கி ஓட்டுகளை பெறுவதை தடுக்க பணியாற்றி வருகின்றன. பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக் குழுக்களால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் இதர பொருட்களை திரும்ப பெற்றுக் கொள்ள மாவட்டந்தோறும் குறைதீர்ப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பறிமுதல் குறித்த புகார்களுக்கு இந்த குழுவினரை மக்கள் அணுகலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Source link