ரூ.1,950 கோடிக்கு ஆர்டர் பெற்றது 'பெல்' நிறுவனம்

புதுடில்லி: இந்திய விமானப்படைக்கு, 1,950 கோடி ரூபாய் மதிப்பில் இரு சிறப்பு மலைப்பகுதி ரேடார் அமைப்புகளை கொள்முதல் செய்ய, மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் ஆர்டர் பெற்றுள்ளது.

இந்த ரேடார்கள், உயரமான மலைப்பகுதிகள், எல்லையோர மற்றும் அதிக ஆபத்துள்ள பகுதிகளை கண்காணிக்க பயன்படுத்தப்படும். இவை, விமானம், ட்ரோன் மற்றும் இதர அச்சுறுத்தல்களை, கடுமையான வானிலையிலும் துல்லியமாக கண்டறியும் திறன் உடையது.

இந்த ரேடார் அமைப்பை, டி.ஆர்.டி.ஒ., நிறுவனம் உருவாக்கியது. வடிவமைப்பு முதல் உற்பத்தி வரை முழுமையாக உள்நாட்டில் செய்யப்படுகிறது.

Source link